(Click the envelope to unseal it)
Hai Raj,
அஸ்ஸலாமு அலைக்கும். Happy BirthDay darling.
பாபுக்காக letter எழுதணும்னா. எனக்கு sweet சாப்பிடுவது போல என்னுடைய 40 வயதிலும் உன்னை முதல் முறையாக பார்ப்பது போலவே இருக்குடா. 20ல் ஆரம்பிச்சோம் மரணிக்கும் வரை காதல் ஜோடிகளாகவே இருக்க அல்லாஹ் அருள் புரிவான்.
ஆமீன். பாபு மரணம் என்னை நெருங்கும் போது உன்னை அதிகமாக காதலிப்பேன். காலம் முழுவதும் உன்னை காதலிப்பேன். கவலையிலும், தூக்கத்திலும், சந்தோஷத்திலும் உன்னை காதலிப்பேன்.
நீ என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம், உன்னை பத்திரமாக பார்த்துக்குவேன். விலையுயர்ந்த நகைகளோ, துணிகளோ எனக்கு சந்தோஷத்தை தராது. உன் அன்பு மட்டும் தான் எனக்கு நிலையான சந்தோஷத்தை தரும். உன் முகத்தில் இருக்கும் சிரிப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்காக ஒரு சிறிய கவிதை.
என்னவனே!
நீ அன்பானவன்
அழகானவன்
ஆடம்பரம் இல்லாதவன்
அண்ணன் போல் என்னை பார்த்துக்கொள்பவன்
ஆழமாக என்னை நேசிப்பவன்.
அவனுக்கென்று ஆசைகள் இல்லாதவன்
என் உலகமாய் இருப்பவன்.
என் வலிகளை புரிந்து கொள்பவன்
என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை சேர்த்தவன்
என் சந்தோஷத்திற்காக உழைப்பவன்
எனக்காகவே பிறந்தவன் என் அன்பு கணவன்.
பாபு வாழ்க்கையில் நம்ம நிறைய விஷயங்களையும், பிரச்சனைகளையும் பார்த்தவர்கள் நாம். இனிவரும் காலத்திலும் எல்லாவற்றையும் ஒன்றாக தீர்மானிப்போம்.
பாபு நீ என் அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் என் அன்பு அதிகரித்துக் கொண்டே தான் போகும்.
பாபுவுடைய பைத்தியம் என்று உலகமே சொன்னாலும் ஆமா என்று போய்க்கொண்டே இருப்பேன். நீ பசங்கன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும். என் அம்மா அப்பாவிற்கும் நிறைய சந்தோஷங்கள் கிடைத்தது இல்லை ஆனால் இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாட்களில் அல்லாஹ் உனக்கும் எனக்கும், நம் பிள்ளைகளுக்கும், நம் குடும்பத்திற்கும், மற்ற உறவுகளுக்கும் அனைவரும் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல பேரும் புகழும், நோய்நொடி இல்லாத வாழ்வை தந்து அருள்வானாக. மறுபடியும் ஒரு குட்டி கவிதை.
அன்பு,
அழுகை,
அரவணைப்பு,
அனைத்து தரும்
காதலன் தான்
இன்று
என் கணவன்!
மீண்டும் ஒருமுறை Happy BirthDay my sweet babu I love you so much
by your
Faritha Banu